ஆட்டிப்படைக்கும் சனி அடங்கி போகிறார்! யாருக்கெல்லாம் இனி ராஜயோகம் தெரியுமா?

ஆன்மிகம்

இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மிதுனம் ராசியில் சூரியன், புதன், ராகு,ரிஷபம் ராசியில் சுக்கிரன், தனுசு ராசியில் கேது, மகரம் ராசியில் குரு,

சனி, மீனம் ராசியில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சந்திரன் இந்த வாரம் ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் சஞ்சரிக்கிறார்.

துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே உங்க வியாபாரம் விருத்தியாகும். முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் சூரியன் ராகு உடன் இருப்பது அதிக நன்மை. உங்களின் பண பிரச்சினை தீரும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான மாற்றம் ஏற்படும்.

ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ராசி நாதன் செவ்வாய் 12ஆம் வீட்டில் அமர்வது சுமார்தான். அநாவசியமாக எந்த பொருளும் வாங்கதீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். வியாபாரிகள் முன்னெச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருந்தால் லாபம் கிடைக்கும்.

தொழிலில் கவனம் இல்லாவிட்டால் நஷ்டம்தான் வரும். நினைத்தது நிறைவேறக்கூடிய வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இரண்டாம் வீட்டில் சூரியன் உடன் சர்ப்ப கிரகமான ராகுவின் சேர்க்கை சில பாதிப்புகளையும், செயல்களில் தடைகளையும் ஏற்படுத்துவார். இந்த வாரம் உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும்.

கவனமாக பேசுங்க இல்லாவிட்டால் குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம் கோபத்தை கட்டுப்படுத்துங்க. சுக்கிரன் உங்கள் ராசியில் இருப்பதால் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும்.

தேவையற்ற செலவுகள் ஏற்படாது. வீட்டில் தம்பதியரிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கும் கவனமாக இருக்கவும். தொற்று நோய் தொற்று பரவும் காலம் என்பதால் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். என்றாலும் அதற்கேற்ப ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு வீட்டிற்குத் தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. மனதாலும் உடலாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.
மிதுனம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் புதன் மற்றும் ராகு உடன் இணைந்து இருக்கிறார் தலைமைப் பதவி கிடைக்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவுகள் சராசரியாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். உடல் அசதியும், மனதில் சோர்வும் உண்டாகும்.

சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
கடகம்
உங்க தன ஸ்தானாதிபதி சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் பின்னர் உடனுக்குடன் சரியாகும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். வீண் விரைய செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் உண்டாகும்.

பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. உங்க உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் மதிப்பு மரியாதை கூடும்.
சிம்மம்
உங்க ராசி நாதன் சூரியன் சஞ்சாரத்தினால் திடீர் பண வருமானம் வரும். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவினால் திக்கு முக்காடி போவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் அவ்வப்போதுசிறு சிறு வாக்குவாதங்கள் வரலாம். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும் திடீர் சலுகை கிடைக்கும்.

செய்யும் தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் சலுகைகள் கிடைக்கும்.

பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக இருங்கள்.
கன்னி
உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். பத்தில் சூரியன் பதவி உயர்வை கொடுப்பார். நினைத்த காரியம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வந்து மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு சுப காரிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம். மனதிலும் உடலிலும் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். பெண்களுக்கு வீட்டில் மதிப்பு மரியாதை கூடும்.

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். நீண்ட நாட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்த வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும். அதிர்ஷ்டகரமான வாரம்.

கடன் சுமைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உங்க மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடி வரும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உங்களை தேடி வரும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

வியாபாரிகளுக்கு முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். 18.06.2020 அன்று பிற்பகல் 03.03 மணி முதல் 21.06.2020 அன்று நள்ளிரவு 12.35 வரைக்கும் வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள்.

வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.
விருச்சிகம்
சூரியன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும். பண வரவு அதிகரிக்கும் கூடவே சுப செலவுகளும் வரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. தம்பதியர் இடையே நெருக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படும் விட்டுக்கொடுத்து போங்க. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருங்க. சிலருக்கு புத்திய பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் நடைபெறும்.

நல்ல செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. திடீரெனவாய்ப்புகள் திடீரென கை நழுவிப்போவதால் சில நேரங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும். 21.06.2020 அன்று நள்ளிரவு 12.35 மணி முதல் 23.06.2020 காலை 7.34 மணி வரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க சின்ன பிரச்சினைகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது கவனமாகவும் நிதானமாகவும் இருங்க.

வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். வண்டி வாகனங்களில் போக வேண்டியிருந்தால் எச்சரிக்கையாக இருங்க. ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.
தனுசு
இந்த வாரம் உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது ஊடலுடன் கூடல் வரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

முயற்சிகள் சாதகமாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகளுக்குப் பிறகு நன்மையில் முடியும்.

வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை. 23.06.2020 காலை 7.34 மணி முதல் 25.06.2020 அன்று பிற்பகல் 12.26 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளது.

இந்த நாட்களில் பேச்சில் கவனமாக இருங்க. வீட்டை விட்டு வெளியே போகும் போதும் வண்டி வாகனத்தில் வெளியே போகும் போது எச்சரிக்கையாக இருங்க.ஹெல்மெட் முகக்கவசம் இல்லாம வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.
மகரம்
இந்த வாரம் உங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வும் தேவை. சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும்.

சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் கைகூடி வரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருள்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

திருமண வாழ்க்கை சந்தோசத்தை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணப்புழக்கம் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கும்பம்
இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பண வரவு திருப்தியை தரும்.

குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பெண்களால் நன்மை ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கை கூடி வரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்பு அமையும்.

தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். சுப செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, நோய்கள் ஏற்படும் கவனம்.
மீனம்
இந்த வாரம் உங்க ராசிக்கு சாதகமான நிலையில் சந்திரன் சஞ்சரிப்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

தொழில் வியாபாரத்திற்குத் தேவையான பணம் கிடைக்கும். சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிக்கலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் வரலாம்.

உங்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம். உடல் நிலையிலும் மனநிலையிலும் அவ்வப்போது சோர்வும் மந்தநிலையும் வரும் கவனமாக இருங்க.