ஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் திக்கு முக்காட போகுது இந்த ராசி… ஆனால் இந்த ராசிக்கு பேராபத்து வரும்… எச்சரிக்கை? உங்க ராசி இருக்கானு பாருங்க…!!

ஆன்மிகம்

முக்கிய கிரகங்கள் ஆகஸ்ட் மாதத்தில் இடமாற்றம் நிகழப்போகிறது. மேலும் சில கிரகங்கள் புதிய இடத்தில் புதிய கூட்டணி சேருகிறது. ஆகஸ்ட் மாதம் சூரியன் கடக ராசியில் பாதி நாட்களும், சிம்மம் ராசியில் பாதி நாட்களும் தோன்றுகிறார். அதுமட்டுமின்றி சூரியனுடன் கூடவே புதனும் சஞ்சரிக்கிறார்.

மேலும் சுக்கிரன் ராகு உடன் பயணிக்கிறார். இந்த மாதம் பலருக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமையும். இந்த மாதமும் லாக்டவுன் நீடிக்க போகிறது. உடலுக்கு நோய் பாதிப்பு எதுவும் இல்லாமல் இந்த மாதத்தை ஆரோக்கியமாக கடந்து விடலாம் என சிலர் யோசிக்கின்றன.

மேலும் இந்த 2020ஆம் ஆண்டைப் பொருத்தவரையில் அனைவரும் உயிரோடு இருப்பதே லாபம் தான் துலாம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்க போகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் இந்த மாதம் லாப ஸ்தானத்தில் இருக்கும் சூரியன், புதன் மாத பிற்பகுதியில் விரைய ஸ்தானத்திற்கு மாறுகின்றன. மேலும் ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் ராகு இணைந்திருக்கின்றன.

இது நாள் வரை மன ரீதியாக சின்னச் சின்ன குழப்பங்களுடன் சில மாதங்களை கடத்தியிருப்பீர்கள் மேலும் இந்த மாதம் குழப்பங்கள் நீங்கி நன்மைகள் நடைப்பெற இருக்கும். செவ்வாய், சனி பார்வையால் வேலையில் பிரச்சனைகள் இருந்தால் அவை தீரும். அதுமட்டுமின்றி உங்கள் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
மலும் இதில் ஆறாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் 16ஆம் தேதிக்கு மேல் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி சென்று உங்க ராசியை நேரடியாக ஏழாம் பார்வையாக பார்ப்பதன் காரணமாக நிறைய நல்ல செய்திகள் நடக்கும்.

அதுமட்டுமின்றி மனதாலும் உடல் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால் அவை சரியாகும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்ல மாதமாக இருக்கும். மேலும் எதிர்கால படிப்புக்காக நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்

மேலும் பயணங்களில் பயணிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் திருமண சுப காரிய முயற்சிகளில் ஒருமுறைக்கு இரண்டு முறை நன்கு யோசித்து செயல்பட வேண்டும். மொத்தத்தில் இந்த மாதத்தில் உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சிகள் உண்டாக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கார்களுக்கு செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே சூரியனும், புதனும் ராசிக்கு இந்த மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளில் பயணிக்கின்றன.

செவ்வாய் மாதம் முற்பகுதியில் ஐந்தாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டிலும் தோன்றுகிறார். மேலும் குரு கேது இரண்டாம் வீட்டிலும் சனி மூன்றாம் வீட்டிலும் பயணிக்கின்றனர்.
ராசிக்காரங்களுக்கு இந்த மாதம் நிறைய நல்ல செய்திகள் தேடி வரும் மேலும் குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரும். மேலும் வேலையில் இடமாற்றம், சம்பள உயர் உண்டாகும்.

மேலும் ராசி அதிபதியும் ஆறுக்கு அதிபதியுமான செவ்வாய் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் திடீர் ராஜயோகம் உண்டாகிறது.

தனுசு:

தனுசு ராசிக்காரகளுக்கு இந்த மாதம் குரு கேது, ஏழாம் வீட்டில் சுக்கிரன், ராகு, இரண்டாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் சூரியன், புதன் போன்ற கிரகங்கள் தோன்றுகின்றன.

அதுமட்டுமின்றி வேலையில் சில பிரச்சினைகள் வந்தால் அதை எதையும் தெளிவாக யோசித்து முடிவு செய்ய வேண்டும். குருவின் பார்வை உங்க ராசியில் ஐந்து ஒன்பதாம் வீட்டிற்குள் வருகிறார்.
குரு ராசியில் ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று புதனோடு இணைந்திருக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்ய ஸ்தானமும் வலுத்திருக்கும் போது அந்த இடத்தில் குருவின் பார்வை கிடைக்கிறது. அதுமட்டுமின்றி சொத்து சேர்க்கை அதிகரிக்கும்.

மேலும் பூர்வீக சொத்துக்களின் மூலம் நல்ல லாபம் உண்டாகும். திருமணம் மற்றும் சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி முயற்சியில் நன்மை நடக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்க ராசிநாதன் ராசியில் ஆட்சி பெற்று விரைய ஸ்தானத்தில் குரு மற்றும் கேது மூன்றாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சுக்கிரன், ராகு ஏழாம் வீட்டிலும், சூரியன் மற்றும் புதன் கிரகங்கள் தோன்றுகின்றன.

இந்த ராசிக்காரர்கள் பேச்சில நிதானமாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி கோபமாக பேச பேச பிரச்சினைகள் அதிகரிக்கும். இந்த மாதம் திருமண சுபகாரியத்திற்கு முயற்சி செய்வதால் தடைகள் ஏற்படும். மேலும் காரணம் காதல் திருமணங்கள் இந்த மாதத்தில் அவசரப்பட வேண்டாம் அவர்களுக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும்.

மேலும் ஏழரை சனியில் ஜென்ம சனி நடக்க இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணிக்கும் போது வேகமாக போவதை விட நிதானமாக செல்ல வேண்டும்.

சூரியன் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதில் மிகவும் சிறப்பாக இருக்கும். திடீர் யோகங்கள் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. இந்த மாதம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் சனி 12 ஆம் வீட்டில் தோன்றுகிறார். 11 ஆம் வீட்டில் குரு, கேது, இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ராகு ஆறாம் வீட்டில் சூரியன், புதன் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த மாதத்தில் தேவையில்லாத விரைய செலவுகள் வரும். வாழ்க்கை துணை உடல் ஆரோக்கியத்திலும் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
செவ்வாய் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு சென்று மேஷம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். அதன் காரணமாக உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி சிறு பயணங்களால் நன்மைகள் நடைபெறும்.

சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெறுவதால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உடல் நலத்தில் ஆரோக்கியம் கிடைக்கும். ஏழரை சனி நடைபெறுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மீனம்:

மீன ராசிக்கார்களுக்கு ராசிநாதன் குரு ராசிக்கு பத்தாம் வீட்டில் கேது உடன் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் சனி ராசியில் செவ்வாய் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன், ராகு ஐந்தாம் வீட்டில் சூரியன், புதன் என கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன.

மேலும் ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன், ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், புதன் என கிரகங்கள் சஞ்சாரம் அமைந்துள்ளது. இதன் காரணமாக துன்பங்கள் நீங்கும். உங்க தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மேலும் வேலை செய்யும் இடத்தில் கவனமாக பேச வேண்டும்.. லாப சனி உங்க வாழ்க்கையில் நல்ல லாபத்தை தருகிறார். சூரியன் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டிற்கு நகர்ந்திருக்கிறார்.
அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம். எதிரிகள் தொல்லை நீங்கும். நாம் எதிர்பார்க்காத விதத்தில் எதிர்பாராத பண வரவு வரும். இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருக்க வேண்டும்.

சில பிரச்சனைகள் வரும் திருமணம் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்ளலாம். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவும், சொந்தங்களுடனும் சந்தோசமாக வாழ்வீர்கள்.