“அந்த” மாதிரி மெசேஜ் அனுப்பியது எல்லாம் ஆன்லைனில் கசியுமா? திறந்து வைத்த கதவான கூகுள்!

கிசுகிசு

“கூகிள் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை! ஆனால் நீங்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை; உங்கள் எல்லா சரித்திரமும் எங்களுக்கு ஏற்கனவே தெரியும்!” என்று சும்மா காமெடியாக ஒரு விளம்பரம் இணையத்தில் பரவியதை பார்த்திருக்க முடியும். இன்டர்நெட்டில் ஏதேனும் ஒரு வசதி, முழுக்க முழுக்க இலவசமாக கிடைக்கிறதென்றால், “நீங்கள் விலைகொடுத்து வாங்கவில்லை, ஆனால் நீங்கள் விலை போய்விட்டீர்கள் ” என்று அர்த்தம்.

கூகுள் ரொம்பவுமே சாமர்த்தியமாக உங்களைப் பற்றிய ஏராளமான தகவல்களை பல விதங்களில் சேமித்து வைக்கிறது. உங்கள் வயது, மொழி, இருப்பிடம், வேலை, மின்னஞ்சல், ஃபேஸ்புக் சுய விவரங்கள், விருப்பங்கள், ரசனைகள், இணையம் மூலம் நீங்கள் வாங்கிய பொருள்கள், இணையத்தில் நீங்கள் ஆர்வமாய் பார்க்கும் விற்பனைப் பொருள்கள், உங்கள் ஆர்வங்கள், உங்கள் தேடல்கள், உங்கள் உறவு, நட்பு வட்டம், உங்கள் உறவுகள், நண்பர்கள் எவற்றை வாங்குகிறார்கள் இப்படி உங்களைப் பற்றி கணக்கற்ற தகவல்களை கூகுள் சேகரித்து மிக மிகச் சாமர்த்தியமாக அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறது.

மை ஆக்டிவிட்டி என்பதில் போய் பார்த்தால், மொத்த ஜாதகத்தையும் காட்டிக்கொடுத்து விடுமாம். கூகுள பார்த்தாலே பயமா இருக்கு, அதே மாதிரி ரிஸ்க் இல்லாத வேறு ஏதாவது இருக்கா என்று கேட்டால், நிச்சயம் இருக்கிறது. DuckDuckGo என்ற தேடுதளம் கூகுள் போன்றே செயல்படுகிறது. அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இந்த தேடுதளத்திற்கு என்றே தனியாக மொபைல் ஆப்பும் உள்ளதாம்.