அந்த காலத்துல ஏன் மண்பானைல சமையல் செஞ்சாங்கன்னு தெரியுமா நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை… இப்ப தெரிஞ்சிக்கோங்க… ஆரோக்கியமா வாழுங்க…?

உணவே மருந்து
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கு என அனைத்திற்கும் மண்பாண்டங்களையே அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், நோய் நோயின்றி வாழ்ந்து வந்தனர்.
மேலும் மண்பானையில் சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் வெப்பநிலை அதிகரிக்கும் போது இந்த நுண் துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும்,  தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்பட்டு மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் குளிர்ச்சியாக  இருக்கிறது.
நாம் மண்பாண்டத்தில் சமைப்பதால் வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. அதுமட்டுமின்றி நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு உள்ளதால் உணவு சூடாகவே இருக்கும். மேலும் உணவு மண்பானையில் வைத்திருப்பதால் சீக்கிரம் கெட்டுப் போகாது.
மண்பானை முழுவதும்  வெப்பம் மெதுவாகப் பரவுவதால் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிலைத்திருக்கும். மண்பாண்டத்தில் சமைப்பதால் உணவு சுவையுடன் இருக்கும். அதுமட்டுமின்றி மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள் நிறைந்து காணப்படுகிறது.
மண்பாண்டத்தில் இருக்கும் தண்ணீரை குடிப்பதால் உடல் சூட்டிற்கு நன்றாக இருக்கும். மேலும் தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதை குடிப்பதால் அந்த தொற்று நீங்கி விடும்.