அட.. ரோஜா சீரியல் நடிகையோட அம்மாவா இது! செம்மையா இருக்காங்களே..!! நீங்க அவரை பார்த்துருக்கீங்களா..!!

செய்திகள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  தமிழ் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியில் முன்னணியில் வரும் தொடர் ரோஜா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த தொடரில் ஹீரோயினாக ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை பெருமளவில் கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி.

இவர் 2010ஆம் ஆண்டு தெலுங்கில்  அந்தாதி பந்துவய என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நா சாமி ரங்கா, ஹைபர், நேனே ராஜு நேனே மந்திரி என தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும் பிரியங்கா தமிழில்  காஞ்சனா 3 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஆனால் அவரை பெருமளவில் பிரபலமடைய வைத்தது ரோஜா சீரியல்தான். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் பிரியங்கா நல்காரி அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

இந்நிலையில் தற்போது அவர் அவரது அம்மாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதைக் கண்ட ரசிகர்கள் அட.. இது பிரியங்காவோட அம்மாவா இல்லை அக்காவா? செம யங்காக இருக்காங்க என கூறி வருகின்றனர்.