அட.. பிரபல சீரியல் நடிகை பிரவீனாவின் மகளா இது..? எம்புட்டு அழகா இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்..!!

செய்திகள்

சின்னத்திரை சீரியல் நடிகை பிரவீனா அவரது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை பிரவீனா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சன் டிவி தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ப்ரியமானவளே தொடரை அடுத்து சன்டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற தொடரில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜாராணி சீசன் 2 வில் சீரியல் கதாநாயகி ஆலியா மானசாவின் மாமியார் ஆக  நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ப்ரவீனாவின் தனது மகள் கௌரி நாயர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அப்படியே அம்மாவை போலவே மகளும் அழகாக உள்ளார் என கமெண்ட் செய்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.