அட பிச்சைக்காரன் படத்தில் அம்மாவாக நடித்த நடிகையா இது? நம்பவே முடியல.. சினிமாவே வேண்டாம் என்று வெளிநாடு சென்றவர் இப்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா?

செய்திகள்

தமிழ் சினிமாவில் என்ன தான் புது புது கதாபாத்திரங்கள் இருந்து வந்தாலுமே, என்றுமே பலருக்கும் மனதில் பதிந்து இருக்கும் சில ரோல்கள் என்றால் அம்மா கதாபாத்திரங்கள் தான். அப்படி தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கதாநாயகியாக நடித்து வந்த நடிகைகளே தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

ஆனாலுமே அந்த கதாபாத்திரத்தில் நடித்தாலுமே பல நடிகைகள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போய் விடுகின்றனர். ஆனால் படமே அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக வந்தது பி ச்சை காரன் படம். இந்த படம் தமிழ் ரசிகர்கள் இடையே மிக பெரும் வரவேற்பினை பெற்றது எனலாம்.

விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி, மக்களிடையே பெரும் பேர் எடுத்தது இந்த திரைப்படத்தில் அம்மாவாக நடித்தவர் தான் நடிகை தீபா. இதுவரை வந்த சில பிரபலமான அம்மா கதாபாத்திரங்களில் இவரும் ஒருவராக இப்போது இருக்கிறார். ஆனால் படத்தில் சில காட்சிகளில் தான் வருவார் என்றாலுமே படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரும் முக்கியமாக இருந்தது.

இவர் அருணாச்சலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். தீபா ஒரு திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல், தந்து பிஸ்னசை பார்த்து கொள்ளும் ஒரு தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். இதுவரையில் இவர் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்தில் மிக பெரிய இமயமாக இருந்து வந்த இயக்குனர் கே.பாலசந்தரின் பிரேமி உள்பட சில நெடுந்தொடர்களில் நடித்தவர் தீபா.

ஒரு கட்டத்தில் இந்த சினிமாவெல்லாம் விட்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்ட அவர், கமலின் உத்தம வி ல்லன் படம் மூலம் திரைத்துரைக்கு மீண்டும் வந்தார். உத்தம வி ல்லனில் படத்தில் அரசி கெட்டப்பில நடித்தவர், பசங்க-2வில் பள்ளி ஆசிரியையாக நடித்தார். அதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகனில் அவருக்கு அம்மாவாக நடித்த தீபா ராமானுஜம், அதற்கடுத்து பிச்சைக்காரனில் விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்த பிறகு கவனிக்கப்படும் அம்மா நடிகையாகி விட்டார்.

2020 ஆம் ஆண்டு முதல் தீபாவும் ஒரு தொழிலதிபராக மாறி, லோட்டஸ்லைன் என்ற பெயரில் கம்பனி நடத்தி வருகிறார். இப்போது மீண்டுமே சினிமாவினை உதறி விட்டு மொத்த குடும்பத்துடன் சென்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர் அந்த தொழிலை மட்டுமே இருந்து வருகிறார். அதனை மட்டுமே முழு கவனமாக இருக்கும் அவர் தற்போது எந்த படத்திலும் நடிப்பதை இல்லை என்கிறார்.பட வாய்ப்புகள் வந்தால் அதனை பற்றி யோசிக்கிகலாம் என கிண்டலாக சிரித்து கொண்டே கூறி இருக்கிறார்.