கடன் சுமை காரணமாக நடிகர் கஞ்சா கருப்பு தனது சொந்த வீட்டை விற்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர்களில் கஞ்சா கருப்பும் ஒருவர். பிதாமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சிவகாசி, பருத்திவீரன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவந்த இவர் குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாததால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியும் இவருக்கு போதிய அளவுக்கு வாய்ப்புகளை தரவில்லை.
இந்நிலையில்தான் பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் நடிகர் கஞ்சா கருப்பு. வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை நடிகர் கஞ்சா கருப்பு தயாரித்தார். இந்த படமும் பெரிதாக வெற்றிபெறவில்லை. இதனால் தொடர் தோ ல்விகளில் து வண்டுபோன இவர், பட தயாரிப்பில் ஏற்பட்ட கடன் காரணமாக தற்போது தான் வசிக்கும் சொந்த வீட்டை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.