அட நம்ம காளை படத்தில் இப்படி ஒரு ஓரமா இருக்கும் இவர் இன்று பிரபல நடிகர்..! யார்னு தெரியுதா? அட.. அவரா இது..!

செய்திகள்

இயக்குனர் தருண் கோபி இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான காளை படத்தில் பிரபல காமெடி நடிகர் முனிஸ்காந்த் நடித்திருக்கும் ஒரு காட்சியின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இன்று மிகவும் பிரபலமாக இருக்கும் ஒருசில நடிகர்கள் தொடக்கத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துதான் இன்று புகழின் உச்சத்திற்கு வந்துள்ளனர். உதாரணத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி, சூரி, யோகி பாபு, நடிகை த்ரிஷா போன்றோர் தொடக்கத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துதான் இன்று உச்சத்திற்கு வந்துள்ளனர்.

இதுபோன்று வளர்ந்துவந்த நடிகர்களில் ஒருவர்தான் முனிஸ்காந்த். கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் வெளியான முண்டாசுப்பட்டி படத்தில் நடித்தபிறகு முனிஸ்காந்த் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

பசங்க 2, சூப்பர் ஸ்டாரின் பேட்டை, விஷாலின் சண்டக்கோழி 2 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் முனிஸ்காந்த். இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் காதல் கிறுக்கன். 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படம்தான் இவர் அறிமுகமான முதல் படம்.

காதல் கிறுக்கன் படத்தை அடுத்து 2008 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான காளை படத்தில் கிராமத்து நபராக ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார். தற்போது அந்த படத்தில் இவர் நடித்த ஒரு காட்சியின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதேபடத்தில் சிம்புவின் நெருங்கிய நண்பரும், தற்போது பிரபல நடிகருமான மகத்தும் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார்.