அட.. குக் வித் கோமாளி பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? அதுவும் ஷகீலாவிற்கு மட்டும் இவ்வளவா!!

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. சமையல் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் அதனையே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதன் முதல் சீசனில் ஏராளமான பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் வனிதா விஜயகுமார் வெற்றியாளரானார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 2வது சீசனில் அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா லட்சுமி, ஷகிலா, கனி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா,சரத் ஆகியோர் கோமாளிகளாக ரகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பிரபலங்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி ஒரு எபிசோடுக்கு நடிகை ஷகிலா 50 ஆயிரம், பாபா பாஸ்கர், மதுரை முத்து ஆகியோர் 40ஆயிரம், அஸ்வின் 25ஆயிரம் சுனிதா, சிவாங்கி மணிமேகலை ஆகியோர் 20ஆயிரம் பாலா, புகழ் ஆகியோர் 15ஆயிரம், தர்ஷா, பவித்ரா லட்சுமி 10ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் பரவி வருகிறது.