அடேங்கப்பா!! விஜய்யுடன் ஒரே படம்… சம்பளத்தை கோடிகளில் உயர்த்திய மாளவிகா மோகனன்!!

கிசுகிசு

மாளவிகா மோகனன் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மாளவிகா மோகனன் அடுத்ததாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார். மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கதாபாத்திரம் என்பதால் அதற்காக தற்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறாராம். மேலும் மூன்று மாத கால சீட்டுக்கு சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது

அடுத்ததாக மாளவிகா மோகனன் சூர்யாவுடன் ஒரு படமும், விக்ரமுடன் ஒரு படமும் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நாலு கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.