அடேங்கப்பா!! சிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்கிறார் .. போட்டோவை பார்த்து வாயடைந்து போன ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே!!

செய்திகள்

திரையரங்கங்களில் பொதுவாக திரைப்படம் போடுவதற்கு முன்பும், விளம்பர இடைவேளையில் போதும், கண்டிப்பாக ஒளிபரப்பப்படும் விளம்பரம் புகைப் பழக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு விளம்பரமாக இருக்கும். அப்படி அனைவராலும் பார்க்கப்பட்ட விளம்பரம். ஒரு பெண்குழந்தையின் முன்பு தந்தை புகை பிடிப்பது போலவும் அந்தச் சிறுமியின் முகத்தைப் பார்த்துவிட்டு தந்தை புகைப் பழக்கத்தைக் கைவிடுவது போலவும் எடுக்கப்பட்டிருக்கும்.

இந்த விளம்பரம் கடந்த 2008 ஆம் ஆண்டு செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறையால் தயாரிக்கப்பட்டது. இந்த விளம்பரம் அந்தக் குழந்தை 7 வயது இருந்த போது எடுக்கப்பட்டது. தற்போது அந்தப் பெண்ணுக்கு 17 வயது ஆகிறது. அவரது பெயர் சிம்ரன் நடேகர்.

இன்ஸ்ட்டாக்ராமில் மட்டும் 3000த்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள். மேலும் பாலிவுட் படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவரை திரைப்படங்களிலும் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். எனவே இவர் விரைவில் தென்னிந்தியப் படங்களிலும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.