90களில் நடித்த நடிகைகள் பலர் தற்போது காணாமல் போய்விடுகிறார்கள். அதில் ஒருசிலர் மட்டும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் 90களில் தன் கவர்ச்சியான நடிப்பால் கொடிகட்டி பறந்த நடிகை ராசி மந்த்ரா.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியளில் நடித்து பிரபலமானார். தமிழில் விஜய் அஜித் படங்களான லவ் டுடே, ராஜா, பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழைவிட தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து பிஸியானார்.
படங்களில் நடித்தும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தார் மந்த்ரா. கடைசியாக வாலு படத்தில் தமிழில் நடித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீ முனி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்து சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், `சில ஆண்டுகளுக்கு முன் படவாய்பில்லாமல் தவித்து வந்தேன். அப்போது இயக்குநர் தேஜா நடிகர் மகேஷ் பாபு படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கதையை கூறினார். படப்பிடிப்பில் நடிக்க ஆரம்பித்தேன் ஆனால் கதை கூறிய விதத்தை விட படகாட்சிகள் வேறுமாதிரியாக இருந்தது.
படத்தில் வில்லனுடன் படு மோசமான காட்சிகளில் நடிக்க நேர்ந்தது. ஆனால், படத்தை ஒப்புக்கொண்டு பிறகு நடிக்க முடியாது என மறுத்தால் இண்டஸ்ட்ரியில் பேர் கெட்டுபோய்விடும் என்பதால் அதை பொருட்படுத்தாமல் சினிமாவில் கெட்ட பெயர் வாங்காமல் இருக்க முழு படத்தினையும் நடித்து கொடுத்தேன்.
இப்படி, இயக்குநர் தேஜா என்னை ஏமாற்றி மோசமான காட்சிகளில் நடிக்கவைத்தார் என்று கூறினார். தற்போது தன் பெண் குழந்தையுடன் கணவரோடு வாழ்ந்து வருகிறார். மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் தற்போது யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில், அழகு குறிப்புகள் முதல் எடை குறைப்பு குறிப்புகள், சமையல் குறிப்புகள் மற்றும் படப்பிடிப்பு தள வீடியோக்கள் என பதிவு செய்து வருகிறார்.
குண்டாக இருந்த இவர் தற்போது உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ளார். இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள்