விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. குடும்பத்தை கவனித்துக்கொண்டு, முன்னேற துடிக்கும் ஒரு சாதாரண குடும்பத் தலைவியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் மனைவியின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளாமல் அவரை திட்டி கொண்டே இருக்கும் சிடுமூஞ்சி கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இந்த கதாபாத்திரத்திற்காக இவர் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களிடம் கடுமையாக திட்டும் வாங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் இது சீரியல்,கதைக்காக நடிப்பது என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சதீஷ் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சக நடிகையான கம்பம் மீனாவுடன் இணைந்து தொட்டால் பூ மலரும் என்ற ரொமான்ஸ் பாடலுக்கு அசத்தலாக நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகிறது. இதனைக்கண்ட நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சிடுமூஞ்சி கோபியா இது! என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
View this post on Instagram