அடடே!! பாபநாசம் படத்தில் நடித்த நடிகையின் மகள் இவர்தானா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே இதோ புகைப்படம்..!!

செய்திகள்

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷா சரத். தூங்காவனம் படத்திலும் நடித்திருந்தார். மலையாள சினிமா நடிகையான இவர் தன் மகள் உத்தராவை நடிகையாக தான் நடிக்கும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.

மேலும் இவரது மகள் துபாயில் பொறியியல் படிப்பு முடித்து உத்தரா தற்போது மனோஜ் கனா இயக்கும் கெட்டா படத்தில் தன் அம்மாவுக்கு மகளாகவே நடிக்கிறாராம்.

இயக்குனர் ஒரு நாள் தற்செயலாக உத்தராவை பார்த்த போது நடிக்க விருப்பமாக என கேட்டதும், உத்தரா மகிழ்ச்சியுடன் ஓகே சொல்லிவிட்டாராம். அதனால் இயக்குனரும் படத்தில் அவரை இணைத்துவிட்டாராம்.