அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்: தமிழக அரசு அறிவிப்பு!

செய்திகள்

பாடங்களில் எழும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பள்ளிக்கு வரும் எனவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகள், தனியார் பள்ளி மாணவ மாணவிகள் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், படத்தில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே மாணவ-மாணவிகள் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.